கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நாளை (20) மாலை 4.00 மணி தொடக்கம் புதன்கிழமை நண்பகல் 12.00 மணி வரையில் விசேட தேவாரதனை நடைபெறவுள்ளது.

இதில் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும், தேவாலயத்திற்கு எதிரே உள்ள புனித அந்தோனியார் மாவத்தை, இராமநாதன் மாவத்தை, கிறிஸ்டி பெரேரா மாவத்தை ஆகிய வீதிகளில் வாகன போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் முடிந்த வரையில் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.