வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தனது ஒரு மாத சம்பளத்தை தடுப்பு நிதியத்திற்கு வழங்கியுள்ளார்.

நாட்டில் தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. இச் செயற்பாடுகளை திறம்பட முன்னெடுப்பதற்கு தடுப்பு நிதியத்தில் பணப்பற்றாக்குறை நிலவுகின்றது.

இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்காக தனது ஒரு மாத சம்பளத்தை தடுப்பு நிதியத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்கள் வழங்கியுள்ளார்.