மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறினால் முடக்க கட்டுப்பாடுகள் பயனுள்ளதாக அமையாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

கொரோனா தொற்று அதிகரிப்பைத் தடுக்க நாட்டை முடக்குவது ஒரு தீர்வு அல்ல என குறிப்பிட்ட அவர், இந்த முயற்சியில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்றும் கூறினார்.

ஆகவே முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதைத் தவிர்ப்பது போன்ற நடைமுறைகளை மக்கள் பின்பற்றாவிட்டால் முடக்க கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் பயனில்லாமல் போகும் என தெரிவித்தார்.