சுற்றுலாவிற்குப் பெயர்போன தாய்லாந்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் பலர் தங்களுக்கு பிடித்த மற்ற நோயாளியுடன் உடலுறவு வைத்துவந்த சம்பவம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

தாய்லாந்து நாட்டின் பாங்காங் மாகாணத்தில் உள்ள சமூத் பிரதான் எனும் இடத்தில் 1,000 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் தங்களுக்குள் கட்டுப்பாடுகளே இல்லாமல் இரவு நேரங்களில் தங்களுக்கு பிடித்த நோயாளிகளுடன் உடலுறவில் ஈடுபடுவது, போதைப்பொருள் பயன்படுத்துவது, சிகெரெட் பயன்படுத்துவது போன்ற பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதைப்பார்த்து பதறிப்போன மருத்துவர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுக்க தற்போது சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன. அதில் சிகிச்சை பெற்றுவந்த பெரும்பாலான நோயாளிகள் இரவு நேரங்களில் கட்டுப்பாடுகளே இல்லாமல் நடந்து கொள்வது தெரியவந்துள்ளது. மேலும் போதைப்பொருள், சிகெரெட் போன்ற விஷயங்களும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டு உள்ளன.

இதனால் சமூத் பிரதான் சிகிச்சை மையத்தில் தற்போது ஆண், பெண் நோயாளிகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு உள்ளனர். மேலும் காவலுக்கு இராணுவம் உள்ளிட்ட போலீசாரும் பணியமர்த்தப்பட்டு இருப்பது படு வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.