கொரோனா வைரஸ் குறித்த எந்த விடயத்தையும் ஊடகங்களிற்கு தெரிவிப்பதற்கு முன்னர் என்னிடம் தெரிவியுங்கள் என ஜனாதிபதி அரச அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோன வைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் அது தொடர்பான விடயங்களை தன்னிடம் நேரடியாக தெரிவிப்பது அவசியம் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களிற்கு தெரிவித்து மக்களை அச்சமூட்டுவதற்கு பதில் தன்னிடம் கொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பான விடயங்களை தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.மக்களின் நலனிற்காக எந்த முடிவையும் எடுக்க தயங்கமாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.