ஜனாதிபதி சட்டத்தரணி என தெரிவித்து மக்களிடம் இருந்து பணங்களை பெற்று ஏமாற்றி வந்த 38 வயதுடைய நபர் ஒருவரை பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் தன்னை ஜனாதிபதி சட்டத்தரணி எனவும், மேல் மாகாண சபை உறுப்பினர் எனவும் தெரிவித்து மக்களை ஏமாற்றி பணத்தைப் பெற்றுளார்.

இவர் பல இடங்களுக்கு சென்று தன்னை ஜனாதிபதி சட்டத்தரணி எனவும் தான் மேல் மாகாண சபை உறுப்பினர் எனவும் கூறி, காணி, வீடு தொழில் வாய்ப்புகளைப் பெற்று தருவதாக மக்களிடம் இருந்து பணங்களை பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.