நாட்டை மூடவேண்டியிருப்பது வருத்தமளிக்கிறது. இதனால் நாளாந்த ஊதியம் பெறுவோர் மிகவும் பாதிக்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் கூறினார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய அவர், நாடு மூடப்பட்டுள்ளதால் மாதாந்த சம்பளம் பெறுவோர் பெரும் பிரச்சினையை எதிர்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.ஊரடங்கு உத்தரவு விதிப்பதன் மூலம் ஐந்து மில்லியன் பேர் அநீதியை எதிர்கொள்வதாகவும் கொவிட் -19 தொற்றுநோயை நாட்டை மூடுவதன் மூலம் முழுமையாக குறைக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

அவுஸ்திரேலியாவில் விதிக்கப்பட்ட பூட்டுதல்கள் மக்களை வீதிகளுக்கு அழைத்துச் செல்ல வழிவகுத்தன என்று அவர் குறிப்பிட்டார். பூட்டுதல்கள் பொதுமக்களுக்கு மன ரீதியாக மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

கொவிட் -19 ஐத் தணிப்பதற்கு இத்தகைய நடவடிக்கைகள் வெற்றிகரமாக இல்லை என்ற நிலைப்பாட்டில் பெரும்பாலான மருத்துவ நிபுணர்கள் இருப்பதாக அவர் கூறினார்.

தொழிற்சங்கங்கள் மற்றும் பிற பிரிவுகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படக் கூடாது என்றும் இந்த விஷயத்தில் சரியான அறிவு இல்லாதவர்களால் கொவிட் -19 தொடர்பான கருத்து தெரிவிக் கப்படுவது வருத்தமளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

நாட்டை மூடுமாறு அரசாங்கத்துடன் தொடர்புடைய பல கட்சிகளின் தலைவர்கள் எழுதிய கடிதம், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறுவதாகவும் காரியவசம் எம்.பி. குற்றம் சாட்டினார்.இது குறித்து ஆராயுமாறு அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.