குழந்தைகளின் உடல் மிகவும் மென்மையாக இருப்பதால் கோடைக்காலத்தில் பல சரும பிரச்சிகளை சந்திக்ககூடும்.

இதனை தவிர்க்க வேண்டுமாயின் சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

வெயில் காலத்தில் வியர்க்குரு மற்றும் சரும நோய்கள் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது. குழந்தைகளை தினமும் காலை, மாலை என இரு வேளையும் குளிக்க வையுங்கள்.
அதிகமாக தண்ணீர், மோர், பழச்சாறு ஆகியவற்றைக் குடிக்கக் கொடுங்கள்.
விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு உடனடியாக குளிர்ந்த நீர் கொடுக்கக் கூடாது. முதலில் சாதாரண தண்ணீரைக் கொடுங்கள். அரை மணி நேரம் கழித்து, வேண்டும் என்றால் குளிர்ந்த நீர் கொடுங்கள்.
பருத்தி உடைகளை குழந்தைகளுக்கு அணிவியுங்கள். உடலை ஒட்டிய இறுக்கமான உடைகளை தவிர்ப்பது நல்லது.
வியர்க்குரு அதிகமாக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
பிறந்து சில நாட்களான பச்சிளம் குழந்தைகளை வெயில் காலத்தில் மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டும். அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.
குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து குறைபாடு இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
குழந்தைகள் நன்றாகச் சிறுநீர் கழிக்க வேண்டும். பருத்தித் துணிகளை அணிவிக்க வேண்டும்.
வெயில் காலத்தில் குழந்தைகளை அடிக்கடி வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்கவும்.
மாலை நேரத்தில் நல்ல காற்றோட்டமாக உள்ள இடத்தில் குழந்தையை சிறிது நேரம் வைத்துக்கொள்ளலாம்.
எலுமிச்சை, ஆரஞ்சு, சந்தனம், மஞ்சள் மற்றும் கிளிசரின் அடங்கிய சோப்பு, கிரீம், லோஷன் ஆகியவை வெப்பத்தை அதிகமாக உட்கிரகிக்கும் தன்மை கொண்டவை. அதனால் அவற்றை வெயில் காலத்தில் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். தலைக்குப் பூசும் சாயமும் வெப்பத்தை அதிகமாக உறிஞ்சும் தன்மை கொண்டது.
பொடுகு தொல்லையை தவிர்க்க மாலை நேரத்தில் தலைக்கு குளிப்பது நல்லது. இப்படி குளிப்பதால் இரவு நேரத்தில் தலைமுடியின் வேர்க்கால்கள் இருக்கும் பகுதி சுத்தமாக இருக்கும்.
வியர்வையை உடலில் நீண்ட நேரம் ஊறவிடாமல் உடனுக்குடன் குளிப்பதுதான் இதைத் தவிர்க்கச் சிறந்த வழி.
சராசரியாக 60 கிலோ எடை கொண்ட ஒருவர் குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலில் வெளியே செல்லும்போது தலைக்குத் தொப்பி அணிந்து, கைகளை முழுமையாக மறைக்கும் கை உறைகளை அணிந்து கொண்டு செல்லலாம்.
குளிர் கண்ணாடிகளைப் பயன்படுத்தலாம்.