15 வயது சிறுமியிடம் கோயிலுக்குள் வைத்து அர்ச்சகர் ஒருவர் பலமுறை தகாத முறையில் நடந்த கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குளியாப்பிட்டி, போஹிங்கமுவ பகுதியிலுள்ள இந்து கோவிலிற்குள் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். ஆலய அர்ச்சகர் இராமச்சந்திரன் ஜெயராமன், மந்திர தந்திர வேலைகளிலும் உள்ளூரில் பிரபலமாக இருந்தார்.

15 வயதான மகள் காதலிக்க ஆரம்பித்ததால் கவலையடைந்த தாயார், அவரது காதல் உறவை மந்திர, தந்திரங்கள் மூலம் பிரிப்பதற்காக ஆலயத்திற்கு அழைத்து சென்றிருந்தார். சிறுமியை ஆலயத்திற்குள் அழைத்து சென்ற அர்ச்சகர், துஷ்பிரயோகம் செய்திருந்தார். அன்று அவர் காற்சட்டை அணிந்திருந்தார்.

மறுநாள் சட்டை அணிந்து வருமாறு அர்ச்சகர் கூறினார். மறுநாள் சிறுமி சட்டை அணிந்து சென்றார். இரண்டாவது நாளும் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார். மறுநாளும் வருமாறு கூறியுள்ளார். எனினும், மறுநாள் ஆலயத்திற்கு செல்ல சிறுமி மறுப்பு தெரிவித்து விட்டார்.

இதன்பின், தனது மகளின் கல்விக்கு இடையூறாக இருப்பதாக மகளின் காதலனான 16 வயது சிறுவன் மீது, தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.