சகல விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் லசித் மாலிங்க அறிவித்துள்ளார்.

லசித் மாலிங்கவின் உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளங்களில் இந்த விடயத்தை அவர் பதிவிட்டுள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்தார்.

எனினும் தொடர்ந்தும் இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுவதாக தெரிவித்திருந்த லசித் மாலிங்க, இன்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்