நாடாளுமன்ற செயற்பாடுகளை எதிர்வரும் நாட்களில் முன்னெடுப்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படவுள்ளது.

அதன்படி, நாளைய தினம் (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ள கட்சித் தலைவர் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

நாடாளுமன்றில் சேவையாற்றும் சில பிரிவுகளின் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்காக சி.சி.ரி.வி காணொளி காட்சிகள் பரிசாதனைக்கு உட்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சபாநாயகரின் தலைமையில் நாளை முற்பகல் 11 மணியளவில் கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.