உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுடன் தொடர்பை பேணிவந்த குற்றச்சாட்டில் பொலன்னறுவை தம்பானை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தொடர்ந்து முன்னெடுத்து வரும் விசாரணையின் போது குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த உவைஸ் சைபூல் ரகுமான் என்பவர் சஹ்ரானுடன் தொடர்பை பேணி வந்துள்ளார் என தெரியவந்ததையடுத்து குறித்த நபரை 8ம் திகதி அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காகக் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இவரைத் தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.