நாட்டின் பாதுகாப்பில் உள்ள சிறிய இடைவெளியை பயன்படுத்தி ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் போன்ற வகையிலான தாக்குதல்களை நடத்த வாய்ப்புகள் இருப்பதாக பொதுபலசேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நாட்டின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறையை பலப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

 இலங்கை சீனாவுடன் நெருங்கிய நட்புறவுடன் செயல்பட்டு வருவதால் சீனாவுக்கு எதிரான சர்வதேச நாடுகள் இலங்கையை எதிரி நாடாக பார்க்கும் நிலை உருவாகி உள்ளது என ஞானசார தேரர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இதனை வைத்துக்கொண்டு சர்வதேச நாடுகள் தமது புலனாய்வு பிரிவினரை நாட்டுக்குள் அனுப்பி சதித்திட்டங்கள் முன்னெடுத்து நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்க வாய்ப்புகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்

அதனால் நாட்டிற்குள் அடிப்படைவாத கருத்துக்களை பரப்பும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஞானசார தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தற்போது அரசியல் களத்தில் காணப்படுவதை அவதானிக்க முடிவதாக சர்வதேச அளவில் இது சென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.