சிரியாவில் 900 அமெரிக்க வீரர்கள் தங்கியுள்ள பகுதிக்கு மர்மமான, ஆளில்லா விமானம் ஒன்று வந்துள்ளது.

அங்குள்ள வான் பரப்பில் மெதுவாக பறந்து அது தகவல் சேகரித்து வந்த நிலையில். குறித்த விமானத்தில் ஆயுதம் இருக்க கூடும் என்று அஞ்சிய அமெரிக்கா, உடனடியாக தனது F15 ரக போர் விமானத்தை அனுப்பி அந்த ஆளில்லா விமானத்தை உடனே சுட்டு வீழ்த்தியுள்ளது.

கிரீன் வில்லேஜ் என்று அழைக்கப்படும் ஒரு எல்லைக் கிராமத்தில் அமெரிக்க படைகளின் தளம் உள்ளது. சிரியாவில் தங்கியுள்ள அமெரிக்க படைகளை குறி வைத்து பல வேவு நடவடிக்கையில் ஈரான் இறங்கியுள்ளமை பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

ஈரான் அமெரிக்கா மீது நேரடியாக தாக்குதல் நடத்தாவிட்டாலும். அமெரிக்க படைகள் உள்ள நாட்டில் அவர்கள் மீது தாக்குதல் நடத்த மறைமுக திட்டம் ஒன்றை தீட்டி வருகிறது.