நடிகை சன்னி லியோன் நடிக்கும் `ஷூரோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

கவர்ச்சி நடிகை என்ற பெயரை மாற்ற தற்போது தீவிரமாக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி மலையாளத்திலிருந்து உருவாக இருக்கும் படம்தான் `ஷூரோ’. `மார்கம் களி’, `குட்டனாடன் மரப்பா’ போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீஜித் விஜயன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இதில் சன்னிலியோன் நடிக்கிறார் என்பதற்காக, கவர்ச்சிப்படம் என்று நினைக்க வேண்டாம். இது முழுக்க முழுக்க ஒரு சைக்கலாஜிகல் த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறது. இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் துவங்க இருக்கிறது.ஏற்கெனவே இதற்காக 10 நாட்கள் நடிப்புக்கு ஒர்க்ஷாப் நடத்தியிருக்கிறோம். விரைவில் சன்னிலியோன் தற்போது நடித்துக்கு கொண்டிருக்கும் இந்திப் படத்தை முடித்துவிட்டு, எங்களது ஒர்க்ஷாப்பில் இணைந்து கொள்வார்” எனக் கூறியிருக்கிறார் ஸ்ரீஜித் விஜயன்.

தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. மலையாளம் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிட இருக்கிறார்கள். விரைவில் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்கள்.