கொரோனா தொற்றுப் பரவலில் இலங்கை 15 ஆவது இடத்தில் உள்ள நிலையில், தற்போதைய கொரோனா தொற்று நிலையைப் புறக்கணிக்கும் நாட்டின் தலைவர்களின் செயலால் தான் மனம் தளர்ந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் சுகாதாரப் பிரிவினரால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளைப் புறக்கணித்து, சொந்த அரசியல் நலனுக்காக அரசாங்கம் செயற்படுவதாக அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தொற்றாளர்கள் மற்றும் இறப்புகளைக் குறைப்பதற்கு நாடளாவிய பொது முடக்கம் அல்லது குறிப்பிட்ட ஒரு பகுதியை முடக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருந்ததையும் அவர் இதன் போது நினைவு கூர்ந்தார்.

நாடளாவிய பொது முடக்கம் இல்லையெனில் இறப்புகள் 30,000 ஆக அதிகரிக்கும். ஒரு குறுகிய காலத்துக்கு முடக்கத்தை அமுல்படுத்துமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார். மக்களின் மரணம் மூலம் அரசியலில் ஈடுபட விரும்பும் நபர்கள், கடுமையான முடக்கம் குறித்து முடிவுகளை எடுக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.