நாட்டில் மீண்டுமொரு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தையோ அல்லது பயணத் தடைகளையோ விதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று கூடிய கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணியில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, கொரோனா அச்சுறுத்தல் அதிகமான பிரதேசங்களில் மக்களைத் தெளிவூட்டலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத்துறையினருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.

அதேபோல நாடு முழுவதிலும் முடக்கம் செய்யவோ அல்லது பயணத்தடை விதிக்கவோ எந்த தீர்மானமும் இன்றைய தினத்தில் எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

இதேவேளை மக்கள் அதிகமாகக் கூடுகின்ற நிகழ்வுகளை தற்காலிகமாக நிறுத்த அறிவுறுத்தும்படியும் சுகாதாரப் பிரிவினருக்கு ஜனாதிபதி பணித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.