சுகாதார அமைச்சராக தான் பணியாற்றிய முறையில் ஏதேனும் அதிருப்தி இருக்கிறதா என்பது தொடர்பில் தனக்கு தெரியாது என போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் வரையில் தனக்கு புதிய அமைச்சு வழங்கப்பட்ட விடயம் தெரியாது.ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றதன் பின்னரே அமைச்சுக்களில் சீர்த்திருத்தங்கள் ஏற்பட்டுள்ளதை அறிந்தேன்.

இது ஒரு எதிர்பாராத நிகழ்வாகும்.அத்தோடு, ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தனக்கு அழைப்பு வரும் போது தான் சுகாதார பிரிவினருடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும்,தற்போது வழங்கப்பட்டுள்ள போக்குவரத்து அமைச்சிலும் தனது பங்களிப்பை முழுமையாக வழங்கி கடமையை மேற்கொள்வதாகவும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.