ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க முடியாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

மேற்குலக தேவைகளுக்காக இவ்வாறான தாக்குதல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் தான் இவ்வாறு கூறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைளை மேற்குலகம் தமது தேவைக்கு பயன்படுத்துவதாக தேரர் தெரிவித்துள்ளார். 

எனினும் தற்போதைய அரசாங்கம் ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.