டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளாா். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியின் போது தோள்பட்டையில் காயமேற்பட்டு ஷ்ரேயாஸ் அய்யருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதனால் அவா் ஒட்டுமொத்த 2021 ஐபிஎல் போட்டிகளிருந்து விலகியுள்ளார்.

ஷ்ரேயாஸ் அய்யர் டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக இருந்த நிலையில் தற்போது அவரது இடத்துக்கு விக்கெட் கீப்பர் மற்றும் துடுப்பாட்டக்கரரான ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எதிா்வரும் 9ம் திகதி சென்னையில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது