தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள், எத்தனை பேருக்கு தொற்றை பரப்புவார்கள் என்பது தெரியவில்லை.

வேகமாக பரவுகிற திறன் கொண்டுள்ள டெல்டா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் பலன் அளிக்குமா என்பது தொடர்பாக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்லைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி உள்ளனர்.

மே மாதம் 17-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 1-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 983 பேரிடம் இருந்து பெறப்பட்ட 8 லட்சத்து 11 ஆயிரத்து 624 சோதனை முடிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அதன் முடிவுகள் வருமாறு:-

* ஆல்பா வைரசுடன் ஒப்பிடுகையில் டெல்டா வைரசுக்கு எதிராக அமெரிக்காவின் பைசர் மற்றும் இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனேகா (இந்தியாவில் இதுதான் கோவிஷீல்டு) தடுப்பூசிகள் குறைவான செயல்திறனையே கொண்டுள்ளன. ஆனால் புதிய தொற்றுகளுக்கு எதிராக நல்ல பாதுகாப்பை கொண்டுள்ளன.

* கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்து, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று பாதிக்காமல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை விட கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது.

* டெல்டா வைரசைப் பொறுத்தமட்டில், 2 தடுப்பூசி போட்ட பின்னரும், தடுப்பூசி போடப்படாதவர்களைப் போலவே வைரஸ் உச்ச நிலையை கொண்டுள்ளது. ஆனால் ஆல்பா வைரசை பொறுத்தவரையில், தடுப்பூசிக்கு பிந்தைய நோய்த்தொற்று உள்ளவர்களின் வைரஸ் உச்ச நிலை குறைவாக உள்ளது.

* தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள், எத்தனை பேருக்கு தொற்றை பரப்புவார்கள் என்பது தெரியவில்லை.

* பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் 2 டோஸ்கள், புதிய கொரோனா வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக ஆரம்பத்தில் நல்ல செயல்திறனை கொண்டுள்ளன. ஆனால் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியுடன் ஒப்பிடுகையில் பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் செயல்திறன் நாளடைவில் குறைந்து விடுகிறது.

தடுப்பூசிகள் கொரோனா வருவதற்கான வாய்ப்பை குறைக்கின்றன. ஆனால் கொரோனா வருவதற்கான வாய்ப்பை தவிர்ப்பதில்லை.இவ்வாறு அதில் தெரியவந்துள்ளது.இதையும் படியுங்கள்…உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21.07 கோடியை கடந்தது