ஆப்கானிலிருந்து பெற்றோர் இல்லாமல் பல சிறுவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு விமானம் மூலம் வந்து சேர்ந்துள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆப்கானிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அமைச்சர் கூறியுள்ளார்.

பத்து வயதிற்கும் குறைவான சிறுவர்கள் தனியாக அவுஸ்திரேலியா வந்துள்ளனர் என அமைச்சர் கரென் அன்ரூஸ் (karen andrews)தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை படையினரிடம் ஒப்படைப்பதை தாங்கள் பார்த்துள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தற்போது அவுஸ்திரேலியாவிற்கு தனியாக வந்த சிறுவர்ககளை நாங்கள் நன்கு கவனித்துக்கொள்கின்றோம் என குறிப்பிட்ட அவர், மேலும் பலர் வரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.