தன்னை திட்ட ஜனாதிபதிக்கு முடியாது என நாராஹென்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கள வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்னைக் கொலை செய்ய முடியும், ஆனால் எனது வாயை அடைக்க முடியாது. கொழும்பு துறைமுக நகரம் ஊடக தனியான வேறு நாடு உருவாகும்.

உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு நான் இதனைச் செய்யவில்லை. வாகனங்கள் மற்றும் கட்டங்களை வழங்கி என்னை விலைக்கு வாங்க முடியாது.

என்னை சஜித் பிரேமதாச வழிநடத்துவதாகக் கூறிய கருத்து, அமைச்சர் மகிந்தானந்த அளுத்மகேவின் உண்மைக்குப் புறம்பான கதை.

மற்றைய பிக்குமார் தற்போது பணம், வாகனங்களுக்காக தமது வாய்களை மூடிக்கொண்டுள்ளனர்.

அரசாங்கத்தை எதிர்த்தால், எமக்குக் கிடைக்கும் சலுகைகள் கிடைக்காமல் போகும் என்பதால், அவர்கள் அமைதியாக இருக்கின்றனர் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.