தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

தியாக தீபம் திலீபனுக்கு சுடரேற்ற முற்பட்ட நிலையிலேயே அவர் கைதாகியுள்ளதாக தெரியவருகிறது.

யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் எந்தவொரு நபரையும் கைது செய்யும் வகையில் பொலிஸார் கடமைக்கு இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.