இந்தியாவின் இரண்டாவது கொரோனா அலையின் வீழ்ச்சிக்கான அறிகுறிகளை தற்போது காட்டுகிறது என்றும் மே மாத இறுதிக்குள் புதிய நோய்த்தொற்றுகள் 1.5 லட்சம் எனும் அளவில் குறையும் என்று சூத்ரா மாதிரியின் பின்னால் உள்ள விஞ்ஞானி ஐ.ஐ.டி பேராசிரியர் மனிந்திர அகர்வால் கூறியுள்ளார்.

குறைவது இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும் என சொல்ல முடியாது எனக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாடு, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் தற்போது தான் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை வேகமெடுக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

“நாம் இப்போது கொரோனா தொற்றுக்களில் வீழ்ச்சியை சந்திக்கிறோம் என்பதை எங்கள் மாதிரி மிகத் தெளிவாகக் காட்டுகிறது. அதாவது மோசமான நிலை முடிந்துவிட்டது என்று அர்த்தம். ஆனால் எல்லா மாநிலங்களும் ஒரே படகில் உள்ளன என்று சொல்ல முடியாது. மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பீகார், ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் போன்ற உச்சத்தைத் தாண்டிய பல மாநிலங்கள் உள்ளன. தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இன்னும் அதிகரித்து வருகின்றன. மே மாத இறுதிக்குள் புதிய நோய்த்தொற்றுகள் சுமார் 1.5 லட்சம் தினசரி பாதிப்புகளாக குறையும்.” என்று அகர்வால் கூறினார்.

இந்தியாவின் தினசரி புதிய நோய்த்தொற்றுகள் இன்று 2,81,367’ஆக வந்துள்ளன. இது கடந்த 26 நாட்களில் மிகக் குறைவு. வாராந்திர நேர்மறை விகிதம் 18.17% ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15.7 லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

பாதிப்புகளின் வீழ்ச்சி சுகாதார அமைப்புக்கு ஒரு சுவாசத்தை அளிக்கும் என்றும், உடனடி மூன்றாவது அலைக்கு முன்னதாக தடுப்பூசி போடுவதற்கு இந்த காலம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் பேராசிரியர் அகர்வால் வலியுறுத்தியுள்ளார்.

“நாங்கள் இன்னும் மூன்றாவது அலையை எங்கள் மாதிரியில் கொண்டு வரவில்லை. ஆனால் இரண்டாவது அலை முடிந்தவுடன், இந்திய மக்களில் கணிசமான சதவீதம் பேர் நோய்த்தொற்று மற்றும் குணப்படுத்தப்பட்ட பின்னர் இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள். அது குறைந்தது சில மாதங்களுக்கு நீடிக்கும். எனவே, இடைப்பட்ட காலத்தில், நாம் தடுப்பூசியை அதிகப்படுத்தினால், மூன்றாவது அலை அல்லது தவிர்க்க முடியாத ஒரு புதிய வைரஸ் தடுப்புக்கு எதிராக நம்மைக் காத்துக்கொள்ளும் நிலையில் இருப்போம்.

ஒரே கேள்வி, எவ்வளவு தீவிரமானது, அல்லது எவ்வளவு சேதத்தை ஏற்படுத்துகிறது என்பது தான். சரியான தடுப்பூசி மற்றும் கொரோனா நடத்தை விதிகள் தொடர்ந்து சிறப்பாக எதிர்கொள்வதை உறுதிசெய்வது நம்முடைய கடமை.” என்று கூறினார்.

பேராசிரியர் அகர்வால் கிராமப்புற இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை குறிப்பிட்டார். ஆனால் அது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.