நடிகை ஸ்மிருதி வெங்கட் புடைவையில் கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது.

ஸ்மிருதி வெங்கட் தமிழில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான தடம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து மௌன வலைஇ ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மாறன் படத்திலும் ஸ்மிருதி நடித்து வருகிறார். மேலும் தீர்ப்புகள் விற்கப்படும்இ பகையே காத்திரு உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

ஸ்மிருதி வெங்கட் திகட்டாத எளிமையான அழகுடன் காணப்படுபவர். ஸ்மிருதியும் தனக்கென்று சில ரசிகர் கூட்டத்தைப் பெற்றுள்ளார். தற்போது ஸ்மிருதி வெங்கட் பபுடவையில் ஜொலிக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.