ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியத்துக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.

அத்துடன், தமது கட்சியின் சுமார் ஆயிரத்து 300 உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களும் தம்மால் முடிந்த பங்களிப்பை வழங்குவார்கள் என சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றின்போதே குறித்த யோசனை முன்வைக்கப்பட்டு அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.