திருநெல்வேலி மற்றும் சில கிராமங்களில் இராணுவம் குவிப்பு! மக்கள் வெளியேற தடை!

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உள்பட்ட திருநெல்வேலி மத்தி வடக்கு – பாற்பண்ணை கிராம அலுவலகர் பிரிவு முற்றாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.அந்தக் கிராமத்தில் 51 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டது என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

திருநெல்வேலி பொதுச் சந்தைக் கடைத் தொகுதி வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில் பாற்பண்ணை கிராமத்தில் 51 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனால் பாற்பண்ணை கிராமத்துக்கான போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் வீதித் தடை அமைத்து கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.