தெற்கு சாண்ட்விச் தீவுகளின் பகுதியில் தெற்கு அத்திலாந்திக் பெருங்கடலில் 7.1 ரிச்டெர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

பொதுவாக மக்கள் வசிக்காத தீவுகளிலிருந்து கணிசமான தொலைவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தீவுகளில் நிரந்தர மக்கள் தொகை இல்லாததாலும் மற்றும் நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்து 2,400 கிலோமீட்டர் (1,500 மைல்கள்) தொலைவில் தீவு அமைந்துள்ளதாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.