தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு மேற்கொண்டதால் முதலாளிமார் தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அத்துடன் தொழிற்சங்கங்களுக்கான சந்தா பணத்தை வழங்காமல் தொழிற்சங்கங்களை செயலிழக்கச்செய்துள்ளதால் தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பதற்கு யாரும் இல்லை.

அதன் காரணமாகத்தான் தோட்டங்களில் முதலாளிமாருக்கும் தொழிலாளர்களுக்கும் கலவரம் ஏற்பட்டு வருகின்றது. அதனால் கம்பனிகாரர்களின் நடவடிக்கைக்கு எதிராக பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றுக்கு தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன் என அமைச்சர் வாசுதேவ நாயணக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற தேருநர்களை பதிவு செய்தல் மற்றும் ஊழியர் சகாய நிதியம் (திருத்தச்) சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.