சுயஸ் கால்வாயில் சரக்குக் கப்பல் ஒன்று சிக்குண்டிருப்பதனால், ஏற்பட்டிருக்கும் கப்பல் போக்குவரத்திற்கான இடையூறினால் நாட்டில் எரிபொருள் விலையில் தாக்கம் செலுத்தாதென அமைச்சர் உதய கம்மன்வில தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 14 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் நாட்டில் களஞ்சியப் படுத்தப்பட்டிருக்கின்றன. இருந்த போதிலும் இந்த விபத்து காரணமாக உலகப் பொருளாதாரத்தில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்.