அரசாங்கத்தின் சிறந்த திட்டங்கள் ஊடகங்களில் தவறான முறையில் சித்தரிக்கப்படுகின்றன. விவசாயத்துறை அமைச்சின் பொறுப்புக்கள் இராணுவத்திற்கு பொறுப்பாக்கப்படவில்லை.

நாட்டில் ஒருபோதும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய பொய்யான வாக்குறுதிகள் குறித்து கருத்துரைக்க விரும்பவில்லை.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் பொதுஜன பெரமுன நிச்சயம் பெற்றிப்பெறும். சஜித், சம்பிக்க, ரணில், அநுர மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.