“நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை எதிர்வரும் 30ஆம் திகதிக்குப் பின்னரும் நீடிக்கக்கூடாது என்பதே எனது விருப்பம்.”

– இவ்வாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஊடகங்களிடம் தெரிவித்தார்.

பல தரப்பினரின் கோரிக்கைகளுக்கு அமைவாகவே இம்முறை நாடு முடக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

உலகின் முன்னணி நாடுகள் பலவும் நாட்டை முடக்கிவிட்டு முன்னேறிச் செல்வது கடினம் என்றும், சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அந்த நாடுகள் இருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டை முடக்கிவிட்டு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை உலக நாடுகள் அனைத்தும் தற்போது ஒப்புக்கொண்டுள்ளன என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய மேலும் குறிப்பிட்டார்.