இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட பலரும் சுகாதார தரப்பினர் பலரும் நாட்டை முடக்குமாறு வலியுறுத்தியிருந்த நிலையில் அதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜகப்க்ஷ மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் பயணத்தடையை அமுல்படுத்துவதா அல்லது வேறு என்ன நடவடிக்கையை அமுல்படுத்துவது தொடர்பில் முக்கிய கூட்டம் ஒன்று இன்றுகாலை இடம்பெற்றது.

சுகாதார அமைச்சின் பிரதானிகள் சுகாதார அமைச்சர் உட்பட குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்றை நேற்று மாலை மேற்கொண்டிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று முக்கிய தீர்மானம் ஒன்று அறிவிக்கப்படும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாட்டை முடக்கும் எண்ணம் இல்லை என ஜனாதிபதி கோட்டபாய தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.