நாடு முழுவதும் ஒரே மாதிரியான வளர்ச்சியை அடைய உட்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மேலும் கூறியுள்ளதாவது, “உட்கட்டமைப்புகளில் வேறு  எந்த நாட்டை விடவும் குறைவானவர்கள் இல்லை என்பதை நிரூபித்து காட்டவேண்டும்.

மேலும் நமது இலட்சியங்களை அடைய கடினமான உழைப்பை செலுத்த வேண்டும். ஒரு வினாடியைக் கூட வீணாக்காமல் உழைக்க ஆரம்பிக்க வேண்டும்.

இதேவேளை கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகத்திலேயே இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது.

இந்த தடுப்பூசியை இந்தியாவிலேயே உருவாக்கியமையினால்தான் மக்களுக்கும் கிடைக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.