இலங்கை மிக மோசமான பொது நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இந்த நிலையில், நிலைமையை குழப்பாமல் நிலையான தீர்வுகளை தேட நேரம் கனிந்துள்ளது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தனது மாதாந்த பொருளாதார பகுப்பாய்வின் படி அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக நிதி ஒழுக்கம் இல்லாததால் நாட்டின் கடன் சுமை வரம்பு மீறி அதிகரித்துள்ளது.

அதிக வட்டி குறுகிய கால கடன்களை பெற்றமை மற்றும் சில நேரங்களில் அவற்றை பொருளாதார ரீதியாக சாத்தியமில்லாத திட்டங்களில் முதலீடு செய்தமை என்பன இந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளன.

அண்மைக் காலத்தில் அறிவிக்கப்பட்ட வரி நிவாரணம், சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் எந்த அரசாங்கமும் செய்யாத பொறுப்பற்ற செயல் என்று அவர் கூறியுள்ளார்.

2020 ல் அரச வருவாய் 30% குறைந்துவிட்டது அரச வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.2% மட்டுமே.எனினும் அதில் 70% மான நிதி கடந்த ஆண்டு வட்டி செலுத்துவதற்காக செலவிடப்பட்டது என்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.