சில நாட்களாகவே சாக்க்ஷி அகர்வால் சினிமா நடிகை என்பதனை விட இன்ஸ்டாகிராம் அழகி என்ற அடை மொழிக்கு சொந்தக்காரி ஆகிவிட்டார் என்றே நமக்கு தோன்றுகிறது. அந்தளவுக்கு நாளொரு மேனியும் பொழுதொரு காஸ்ட்யூம் என கலக்கி வருகிறார்.

தமிழ் மட்டுமன்றி கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மாடலிங் துறையில் இருந்து சினிமா பக்கம் வந்தவர். தமிழில் ராஜா ராணி வாயிலாக அறிமுகமானார். காலா இவருக்கு நல்ல பிரேக் த்ரூவாக அமைந்தது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானார். சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், பகீரா, அரண்மனை 3 , புரவி, தி நயிட் என பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஹாட் ஸ்டாரில் வெளியான ஆர்யாவின் டெடி படத்தில் மனோதத்துவ டாக்டர், பிரியா என்ற கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். சின்ன ரோல் தான் எனினும் இணையத்தில் பலரது கவனத்தையும் இப்படம் அவருக்கு பெற்று கொடுத்தது. இந்நிலையில் காற்றுள்ள பொழுதே தூற்றிக்கொள்ள வேண்டு மென்ற கணக்கில் புதிய போட்டோ ஷூட் புகைப்படத்தை நேற்று வெளியிட்டுள்ளார். வழக்கம் போல தனது பிட் ஆன உடம்பு தெரியும்படி அசத்தியுள்ளார் சாக்ஷி. நீங்க ஒரு திறந்த புத்தகம் சாக்க்ஷி, இதுக்கு பிட்டு படத்தில் நடித்து விடலாம் என கலாய்த்த வருகின்றனர் ரசிகர்கள்.