நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா தோட்டத்தின் 2ஆம் கட்டடைப் பிரிவில் காணாமல்போயுள்ள யுவதியை தேடும் நடவடிக்கையில் விசேட அதிரடிப்படை களமிறக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி தனது பாட்டியுடன் காட்டுப்பகுதிக்கு, விறகு சேகரிப்பதற்குச்சென்றிருந்த நிலையிலேயே கடந்த 5 ஆம் திகதி திடீரென காணாமல்போயுள்ளார்.

இது தொடர்பில் குறித்த யுவதியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் 5 ஆம் திகதி முறையிட்டுள்ளார்.

மாயமான யுவதி சிறிது காலம் புத்திசுயாதீனமற்று காணப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்துள்ளார் என யுவதியின் தந்தை பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

யுவதி காணாமல்போன பகுதியில் சில இடங்களில் இரத்த கரைகள் காணப்படுவதாகவும், சிலவேளை சிறுத்தை தாக்கி இழுத்துச்சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே தேடுதல் வேட்டையில் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

ஜெயபாலன் நிலானி என்ற யுவதியே, இவ்வாறு விறகு தேடச் சென்ற நிலையில், இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

தகவல் – சூர்யா