நிதி அமைச்சர் பசில் ராஷபக்ச, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அதுரலியே ரத்தன தேரர் ஆகியோரின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அரசியலமைப்புக்கு விரோதமானது என சிரேஷ்ட வழிக்கறிஞரும் பொதுநல ஆா்வலருமான நாகானந்த கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

இவர்களை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுடன் இடம்பெற்ற நேர்காணாலின்போதே அவா் இவ்வாறு கூறினார்.

அத்துடன், ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிடும்போது கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க பிரஜையாக இருந்தார். அவர் தேர்தலில் போட்டியிட்டதும் அரசியலமைப்புக்கு விரோதமானது எனவும் நாகானந்த கொடித்துவக்கு மேலும் கூறினார்.