ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கும், கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது

அலரிமாளிகையில் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் தற்போதைய கொவிட்-19 பரவல் நிலை தொடர்பிலும், ஏனைய பிரச்சினைகள் குறித்தும், இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.