” 1990 முதல் 2000 வரையான 10 ஆண்டுகால பகுதியில் இடம்பெற்ற விடயங்களே பண்டோரா ஆவணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, மேற்படி காலப்பகுதிக்குள், ராஜபக்ச ஆட்சி யுகத்துக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. இருந்தாலும் இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பண்டோரா ஆவணம் தொடர்பில் பெரும் பரபரப்பாக பேசப்படுகின்றது. அந்த ஆவணம் தொடர்பில் அவதானம் செலுத்தினால் 1990 – 2000 வரையான 10 ஆண்டு காலப்பகுதியில் திரட்டப்பட்ட நிதி, மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் தொடர்பான விடயங்களே அதில் உள்ளடங்கியுள்ளன.

மேற்படி காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ச யுகம் ஆரம்பமாகவில்லை. 2005 ஆம் ஆண்டில்தான் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியானார். எனினும், எந்த ஆட்சி காலப்பகுதியில் சம்பவம் இடம்பெற்றாலும் அது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். நாம் அதனை நடத்துவோம். ” – என்றார்.