2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரின், பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் முன்னிலையில் வகித்து வருகின்றது.

இதன்படி 29 தங்கம், 18 வெள்ளி, 16 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 63 பதக்கங்களை சீனா வென்று முதலிடத்தில் உள்ளது.

இரண்டாம் இடத்திலுள்ள அமெரிக்கா, 22 தங்கம், 27 வெள்ளி 17 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 66 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

17 தங்கம், 6 வெள்ளி, 10 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 33 பதக்கங்களை பெற்று ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது.

14 தங்கம், 4 வெள்ளி, 15 வெண்கலம் என அடங்கலாக மொத்தமாக 33 பதக்கங்களுடன் அவுஸ்ரேலியா நான்காவது இடத்தில் உள்ளது.

12 தங்கம், 21 வெள்ளி, 17 வெண்கலம் என அடங்கலாக மொத்தமாக 50 பதக்கங்களுடன் ரஷ்யா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், தென்கொரியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் முறையே ஆறு முதல் பத்து இடங்களை பிடித்துள்ளது.