மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால், அநாவசியமான பயணங்களை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

மேலும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மாகாணங்களுக்கு இடையில் பயணங்களை மேற்கொள்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை மேல் மாகாணத்திற்குள் உட்பிரவேசிக்க மற்றும்  மேல் மாகாணத்திலிருந்து வெளியேற முயன்ற 364 பேர், நேற்று (வியாழக்கிழமை) திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் பயணக் கட்டுப்பாட்டை மீறிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நீதிமன்றத்தி முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண கூறியுள்ளார்.