நாடு முழுவதும் எதிர்வரும் 13ம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானம் நாளை (10) எடுக்கப்படவுள்ளது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது. 

இந்த கூட்டத்தில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் மேலும் ஒரு வார காலத்திற்கு பயணத்தடை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

சுகாதார நிபுணர்கள் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் ஏற்கனவே கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.