பலாங்கொடை – பஹன்துடாவ நீர்வீழ்ச்சியில் பதிவு செய்யப்பட்ட, பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் காணொளியொன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த இளைஞர் மற்றும் யுவதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மஹரகம மற்றும் எல்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

34 வயதான ஆண் ஒருவரும், 24 வயதான யுவதியொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.