பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது இரண்டாவது இனிங்ஸ்க்காக துடுப்பாடிவரும் பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பாக அணித்தலைவர் பாபர் அஸம் 54 ஓட்டங்களுடனும் பஹீம் அஷ்ரப் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்,

முன்னதாக தமது முதலாவது இனிங்ஸ்க்காக துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 253ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

36 ஓட்டங்கள் பின்னிலையுடன் தனது இரண்டாவது இனிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்டநேர முடிவின் போது 160 ஓட்டங்களை பெற்று 124 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.