பாணந்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 2 சரீரங்கள் மாறுபட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 89 மற்றும் 93 வயதுகளையுடைய இரண்டு பெண்கள் மரணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 89 வயதுடைய முஸ்லிம் பெண் ஒருவர் கடந்த 21 ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது சரீரத்திற்கு பதிலாக பாணந்துறை பகுதியை சேர்ந்த 93 வயதுடைய பெண்ணின் சரீரம் அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, குறித்த சரீரம் அன்றைய தினம் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாணந்துறை வீரசிங்க மாவத்தை சேர்ந்த 93 வயதுடைய பெண்ணின் இறுதிக்கிரியைகளுக்காக அவரது உறவினர்கள் பாணந்துறை வைத்தியசாலைக்கு சென்று குறித்த சரீரம் தொடர்பில் வினவியிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த சரீரம் அங்கிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.