ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஆளுங்கட்சிக்குள் நீடிக்கும் முரண்பாடுகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. 

ஆனாலும், ஆளுங்கட்சிக்குள் அதிருப்தியோடு இருக்கும் பங்காளிக் கட்சித் தலைவர்களான அமைச்சர்கள் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

கட்சித் தலைவர்கள் கூட்டம் எனும் பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், நேற்றைய கூட்டத்திற்கு பொதுஜன பெரமுனவின் தவிசாளரான பஷில் ராஜபக்ஷ வேறு பலரையும் அழைத்து வந்ததாக குறிப்பிட்டே விமல் வீரவங்ச தரப்பு வெளிநடப்பு செய்துள்ளது.

ஆளுங்கட்சிக்குள் தொடரும் முரண்பாடுகளை கழையும் நோக்கில் கூட்டப்பட்ட நேற்றைய கூட்டத்தின் பின்னரும் முரண்பாடுகள் அதிகரித்த நிலையே காணப்படுகின்றது.