வேதனப் பிரச்சினையை முன்வைத்து ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றுடன் 90 ஆவது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 11 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்கு, தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறித்த பேச்சுவார்த்தையில் தங்களது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.