சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பெற்றோலிய வளங்கள் சட்டமூலத்தில் நேற்று (08) கையொப்பமிட்டு அதனைச் சான்றுரைப்படுத்தினார்.இந்தச் சட்டமூலம் கடந்த 06ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்தச் சட்டமூலம் இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையைத் தாபிப்பதற்கும், ஆரம்பநிலை பெற்றோலியக் கைத்தொழில் மீதான தேசிய கொள்கையொன்றை உருவாக்குவதற்கும், இலங்கையிலுள்ள நவீன தேடிக்கண்டறிக்கை, அபிவிருத்தி தயாரிப்பு மற்றும் முகாமைச் செயல்முறையினூடாக உள்நாட்டுப் பெற்றோலிய வளங்களின் அதிகபட்ச பொருளாதாரப் பெறுமானத்தைக் கவர்கின்ற கட்டமைப்பை ஒழுங்குபடுத்துவதற்காகவும் முகாமை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கானதுமான சட்டமூலமாகும்.

இதற்கமைய 2021ஆம் ஆண்டு 21ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டம் நேற்று (08) முதல் நடைமுறைக்கு வருகிறது.